தேசிய வேதியியல் ஆய்வகம்
தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாக 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஏறத்தாழ 200 வேதியல் ஆய்வாளர்கள் பணி செய்கின்றனர். இந்த வேதியல் ஆய்வகம் பாலிமர் அறிவியல், கரிம வேதியியல், வினையூக்கம், பொருட்கள் வேதியியல், வேதியியல் பொறியியல், உயிர்வேதியியல் அறிவியல் மற்றும் வேதியியல் செயல்முறை மேம்பாடு ஆகியவற்றில் புலமைப் பெற்றது. அளவீட்டு அறிவியல் மற்றும் வேதியியல் தகவல்களுக்கு இது நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
Read article